BT Assistant Graduates Teachers Appointed List Announced, Remaining subject English, maths and chemistry announced before 14th september




Monday, 29 August 2011

16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்

4855 BT ASSISTANT TEACHERS SENIORITY POST (EARLIER ) APPOINTED THIS OR NEXT WEEK

52 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் நியமனம் : ஜெயலலிதா புதிய சாதனை

தினமலர் செய்தி


சென்னை: முந்தைய தி.மு.க., அரசின் ஐந்தாண்டு காலத்தில், 55 ஆயிரத்து 69 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களில் அதுவும் ஒரே வாரத்தில், 52 ஆயிரத்து 413 ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவிப்பு செய்து, முதல்வர் ஜெயலலிதா புதிய சாதனை படைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில், 7,000, 8,000 ஆசிரியர்கள் நியமனம் என்று தான் வழக்கமாக அறிவிப்பு வரும். அதிலும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் இருக்காது. காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்தாலும், அதில் ஓரளவு இடங்கள் தான் நிரப்பப்படும். அடுத்த ஆண்டு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் மூலம், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். முந்தைய தி.மு.க., ஆட்சியின் ஐந்தாண்டுகளில், 55 ஆயிரத்து 69 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதை மிகப் பெரிய சாதனையாக, தி.மு.க.,வினர் கூறினர். இந்நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றரை மாதங்களில், அதுவும் கடந்த ஒரே வாரத்தில், 52 ஆயிரத்து 413 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு, தி.மு.க., அரசின் சாதனையை முதல்வர் முறியடித்துள்ளார். வெறும் பொதுவான பாடத் திட்டத்தை அமல்படுத்துவது மட்டுமே சமச்சீரான கல்வியாக இருக்காது என்பதும், அனைத்து நிலைகளிலும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, கல்வித் தரத்தை மேம்படுத்துவது முக்கியம் என்பதும், முதல்வர் ஜெயலலிதாவின் அழுத்தமான கருத்து. அதன்படி, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சட்டசபையில், கடந்த 22ம் தேதி பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதிலளித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசும்போது, 14 ஆயிரத்து 377 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படுவர் என்று அறிவித்தார். இந்நிலையில், சட்டசபையில் விதி 110ன் கீழ், பள்ளிக் கல்வித் துறையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஏராளமான அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். மாநிலம் முழுவதும் 775 பள்ளிகள் தரம் உயர்வு, 33 ஆயிரத்து 36 ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 5,000 என மொத்தம், 38 ஆயிரத்து 36 பேர் பணி நியமனம் செய்யப்படுவர் என, முதல்வர் அறிவித்தார். கடந்த வாரத்தில் அமைச்சர் வெளியிட்ட புதிய நியமனம் மற்றும் நேற்று முதல்வர் வெளியிட்ட புதிய நியமனங்களும் சேர்த்து மொத்தம் 52 ஆயிரத்து 413 பேர், பள்ளிக் கல்வித் துறையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்பப்பட உள்ளன.

Sunday, 28 August 2011

Computer Staff posting through employment offfice

16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்-28-08-2011

தினமலர்

சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. காலை அல்லது பிற்பகல் என அரை நாள் வேலை, தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கும் வகையில், சமீபத்தில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 775 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், இதற்காக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்தும் முதல்வர் அறிவித்தார். மேலும், கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்காக, 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன்கீழ், உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கை வேலைப்பாடு, தையல் ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். பல அரசுப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 70, 80 மாணவர்கள் இருக்கின்றனர். இதுபோன்ற பள்ளிகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் ஏற்கனவே அடையாளம் கண்டு, மாவட்டம் வாரியாக பட்டியல் எடுத்துள்ளது. அதன்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பணி நியமனம் எப்படி? பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள், 32 மாவட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்ற விவரங்களையும் பட்டியலிட்டு, அதை பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையிடம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவு மூப்பு பட்டியலை பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், அவர்களை அந்தந்த உள்ளூர் மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, இரு துறைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. மாவட்டத்தில் அதிக காலிப் பணியிடங்கள் இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர். இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, &'எந்த முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறித்து, இதுவரை முடிவு எடுக்கவில்லை. அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும்&' என்றார். சம்பளம் எவ்வளவு? பகுதி நேர ஆசிரியர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் வழங்கும். மாவட்டம் வாரியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும். வேலை நேரம்: ஆசிரியர்களின் பணியைப் பொருத்து, காலை அல்லது பிற்பகல் என, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அரை நாள் வேலை செய்யும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் பணி நியமனங்கள், அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பகுதி நேர ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு, பட்டதாரிகளிடையே படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Saturday, 27 August 2011

13,300 ஆசிரியர் பணியிடங்கள் - 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்- விதி 110ன் கீழ் ஜெயலலிதா அளித்த அறிக்கை

சென்னை : தமிழகத்தில் 13,300 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப் பைகள் வழங்கப்படும். பாடப் புத்தகங்கள் 3 பருவங்களாக பிரிக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். பேரவையில் நேற்று விதி 110ன் கீழ் ஜெயலலிதா அளித்த அறிக்கை: அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் ஆக மொத்தம் 775 பள்ளிகள் 419 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்தப்படும். நிலை உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு, 3,187 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்து, 90 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில், இந்தக் கல்வி ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ஏற்படுத்தப்படும். குழந்தைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு புத்தகச் சுமை அதிகமாக இருப்பதால், இந்த சுமையைக் குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முப்பருவ முறை அறிமுகப்படுத்தப்படும். முழுக் கல்வியாண்டிற்குரிய பாடப் புத்தகங்கள் மூன்று பருவங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பருவ முடிவிலும் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டுடன் கூடிய தேர்வுகள் நடத்தப்படும். இதனால், மாணவர்களின் கவலை, அச்சம், மன அழுத்தம் ஆகியவை பெரிதும் குறைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு புத்தகச் சுமையினால் ஏற்படும் இன்னல்கள் நீக்கப்படும். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு அவர்களது புகைப்படம் மற்றும் ரகசிய குறியீட்டுடன் கூடிய மதிப்பெண் சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

நன்றி : தினகரன்

Friday, 26 August 2011

13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் அறிவிப்பு

13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: முதல்வர் அறிவிப்பு சென்னை, ஆக.26 (டிஎன்எஸ்) முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (ஆக.26) சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ், அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது; கல்வி என்னும் வற்றாத செல்வம், தனி மனிதன் வாழ்க்கையை வளம் பெறச் செய்யவும், அவன் சார்ந்த சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகிறது. பொருளாதார வளர்ச்சி அடைவது மட்டும் அன்றி, வாழ்க்கையில் பல்வேறு நலன்களையும் முழுமையாகப் பெறுவதற்கு கல்வி இன்றியமையாதது ஆகிறது. இத்தகைய பயன் மிக்க கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரமாக அளிப்பதற்கும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலையில் குழந்தைகள் கல்வி கற்கும் வசதியை அளிப்பதற்கும்; இவை மூலம் உண்மையான, நிலையான சமச்சீர் கல்வி வழங்கிடவும் எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் தரமான கல்வியைப் பெறும் வகையில், எனது தலைமையிலான அரசால் செயல்படுத்தப்பட உள்ள சில புதிய திட்டங்கள் குறித்து நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அனைவருக்கும் தரமான கல்வியை வழங்குவது என்ற இவ்வரசின் நோக்கத்தின் ஒரு அங்கமாக, மேலும் 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும்; 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும்; ஆக மொத்தம் 775 பள்ளிகளை 419 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் நிலை உயர்த்த நான் ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிகளைத் தரம் உயர்த்துவதினால் மட்டும் தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியாது. தேவைக்கேற்ப ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்பதை எனது அரசு உணர்ந்துள்ளது. எனவே, நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும், ஆசிரியர்-மாணவர் விகிதத்தின் அடிப்படையில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்த எனது தலைமையிலான அரசு முடிவெடுத்து உள்ளது. அதன்படி, 9,735 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், ஆக மொத்தம் 13,300 ஆசிரியர் பணியிடங்களை, 315 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த ஆண்டிலேயே ஏற்படுத்த ஆணையிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் இந்த மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். (டிஎன்எஸ்) Aug 26, 2011

Thursday, 25 August 2011

2011-2012ம் கல்வி ஆண்டில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல்

1. 2011(வரலாறு) காலிப்பணியிடத்திற்குத் தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களின் பட்டியல்

Sunday, 21 August 2011

All students Employment Data are Uploaded Employment Website - verify the following format to input the Register Number and Take the Print out Your Employment ID Card


Please use the Registration number (In Upper Case) which is printed in Employment Exchange identity card by prefixing with your exchange code.
For example you have registered at Chennai Professional Exchange, your card number printed as 1996M00216 (In case you are a women candidate use "F" in the place of "M" while logging in. For eg: if the old Employment Registration is W/7054/1998 log in as CHP1998F00007054),
and your password will be your date of birth (dd/mm/yyyy) in this pattern.

jabs-trb.blogspot.com


Tamilnadu Govt Order For Ph.d Programmes

education childrens video


Existing Teachers Transfer counselling will be August 28th


Existing teachers councelling will be august end after that selected New teachers counselling will be before sept 10th 2011.

Saturday, 20 August 2011

trb seniority list 2011


trb seniority list 2011 new click here
newly appointed BT assisitant seniority list 2011......

Periyar University college syllabus


UG ProgrammesPG Programmes