Direct Recruitment of Graduate Assistants for Government Middle/High/Higher Secondary School 2010-11 through Employment Registration Seniority
REVISED PROVISIONAL RESULTS AFTER CERTIFICATE VERIFICATION
Sub:
Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors regarding selection that may have crept in. Incorrect list would not confer any right of selection.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Dated: 21-09-2011 |
Chairman
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Wednesday, 21 September 2011
Friday, 16 September 2011
Friday, 9 September 2011
பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் அடுத்த பட்டியல் விரைவில் வெளியாகும்
தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியல் ஆகிய 6 பாடங்களுக்கான ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் இந்தப் பாடங்களில் மொத்தம் 1,513 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வில் மொத்தம் 1,326 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 38 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 139 இடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய 3 பாடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் புதிய பட்டியல் திங்கள் அல்லது புதன்கிழமைக்குள் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த 3 பாடங்களுக்கும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பட்டியலை சரிபார்க்கும் பணி இப்போது நடைபெற்று வருகிறது. ஓரிரு நாள்களில் இதுதொடர்பான பணிகள் நிறைவடையும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் மொத்தம் 1,200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நலத் துறை பள்ளிகளுக்கான 276 ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் மதுரை மாநகராட்சியின் 10 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட வேண்டியுள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் காலியாக இருந்த 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு மே, நவம்பர் மாதங்களிலும், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
இதையடுத்து, தாற்காலிக தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 28.02.11-ம் தேதி வெளியிடப்பட்டது.
பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, பதிவு மூப்பின் அடிப்படையில் தகுதியுடைய சில பதிவுதாரர்கள் நீதிமன்றத்தை அணுகினர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி தகுதி இருந்தால், பணி நியமனத்துக்குப் பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அவர்களுக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
பதிவுமுப்பு இனச் சுழற்சி முறை அடிப்படையில் 6 பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதரப் பாடங்களுக்கான திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கான ஆணை தனித்தனியே அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட 3,665 ஆசிரியர் பணியிடங்களுக்கான தாற்காலிக தேர்வுப் பட்டியல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மொத்த இடங்கள் விவரம்
பல்வேறு துறைகளுக்காக மொத்தம் 5,151 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது.
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறை - 3,665
அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் - 1,200
நலத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகள் - 276
மதுரை மாநகராட்சி பள்ளிகள் - 10
thanks : dinamani
Wednesday, 7 September 2011
Tuesday, 6 September 2011
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 1,045 ஆசிரியர்கள் இந்த ஆண்டு நியமனம் அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, செப்.7-
"ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள 1045 ஆசிரியர் பணியிடங்கள் இந்த ஆண்டே நிரப்பப்படும்'' என்று அமைச்சர் என்.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் ஆதிதிராவிட நலத்துறை மானியக் கோரிக்கை மீதான உறுப்பினர்கள் விவாதத்திற்கு பதில் அளித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் பதில் உரை அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மாணவ-மாணவிகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம், செயல்படுத்தப்படும் 1081 ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் 1,75,456 மாணவ, மாணவிகளும், 296 பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் 37,640 மாணவ மாணவிகளும் ஆக மொத்தம் 1377 பள்ளிகளில் 2,13,096 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றார்கள்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் செயல்படுத்தப்படும் 1254 ஆதிதிராவிடர் நல விடுதிகளில் 87,136 மாணவ, மாணவிகளும், 40 பழங்குடியினர் நல விடுதிகளில் 2072 மாணவ, மாணவிகளும், 296 அரசு உண்டு உறைவிடப் பள்ளிகளில் 30,807 மாணவ, மாணவியர்களும், ஆக மொத்தம், 1590 விடுதிகளில், 1,20,015, மாணவ, மாணவிகள் தங்கி படிக்கிறார்கள்.
1045 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
இத்துறையில் மொத்தம் 8587 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 7542 ஆசிரியர்கள் மட்டுமே, பணிபுரிந்து வருகிறார்கள். எஞ்சிய 1045 ஆசிரியர் பணியிடங்கள், தி.மு.க ஆட்சியில், நிரப்பப்படாமல் காலியாக இருந்ததை அறிந்த, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், இந்த ஆண்டே, காலிப் பணியிடங்களை, உடனடியாக நிரப்பிட ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆண்டு 7 ஆதிதிராவிட நல, நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 8 ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாகவும், 3 பழங்குடியினர் நல நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 2 பழங்குடியினர் உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் ஆக மொத்தம் 20 பள்ளிகளை தரம் உயர்த்திடவும், ஆணையிட்டுள்ளார்.
thanks: daily thanthi

பட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு
சென்னை, செப். 6: தமிழக அரசு இந்த ஆண்டு புதிதாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிக்க உள்ளதாக பேரவையில் அறிவித்துள்ளது. இவர்களைத் தேர்ந்தெடுத்து நியமிக்கும் பொறுப்பில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் ஆள் பற்றாக்குறையால் கடும் சவாலை எதிர்நோக்கி உள்ளது.
ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யவே ஏறத்தாழ ஓராண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 56 ஆயிரம் புதிய ஆசிரியர்களை நியமிக்க எத்தனை ஆண்டுகள் தாமதம் ஏற்படுமோ என்று பட்டதாரி ஆசிரியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அதிகாரிகள், ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் தவிர, இவ்வளவு ஆசிரியர்களை ஓராண்டுக்குள் நியமிக்க சாத்தியமே இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது:
ஆண்டுக்கு சராசரியாக 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ஆசிரியர்கள் வரை இப்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 56 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் குறைவான ஊழியர்களே இதற்குப் பிரதான காரணம்.
நீதிமன்ற வழக்குகள், வேலைவாய்ப்பு அலுவலகம் அவ்வப்போது அனுப்பும் பட்டியல்கள் என பிற காரணங்கள் இருந்தாலும், ஆள் பற்றாக்குறையே முக்கியக் காரணமாக உள்ளது.
ஓவ்வொரு ஆண்டும் படிப்படியான நியமனத்திலேயே அதிக கால தாமதம் ஆனது. ஆனால், ஒட்டுமொத்தமாக இவ்வளவு ஆசிரியர்களை, மிகவும் குறைந்த ஊழியர்களை வைத்து நியமனம் செய்வது சாத்தியமில்லாதது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தம் 17 பேர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தில், தலைவர், இயக்குநர் அந்தஸ்தில் 2 அதிகாரிகள், 2 இணை இயக்குநர்கள், 2 பிரிவு கண்காணிப்பாளர்கள், 6 எழுத்தர்கள், 4 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 17 பேர் பணியாற்றுகின்றனர். இவர்கள்தான் கடந்த 5 ஆண்டுகளில் 56 ஆயிரம் ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஊழியர்களை அதிகரிக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் பலமுறை பரிந்துரைகள் அனுப்பப்பட்டதாகவும், ஆனால், அப்போதைய அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
என்ன தேவை? தேர்வுக் கட்டுப்பாட்டாளர், 2 கண்காணிப்பாளர்கள், 8 எழுத்தர்கள், ஒரு கணக்கு அலுவலர் என குறைந்தபட்சம் 12 அலுவலர்களையாவது கூடுதலாக நியமிக்க வேண்டும்.
ஆசிரியர் நியமனத்தை விரைந்து முடிக்க வேண்டுமானால் இன்னும் அதிகமான ஊழியர்கள் நிச்சயமாகத் தேவை என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக அரசின் அறிவிப்பால் மாணவர்களும், சமுதாயமும் உடனடியாகப் பயனடைய வேண்டும் என்றால் ஆசிரியர் தேர்வு வாரிய ஊழியர்களின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க வேண்டும். இதை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
பட்டதாரி ஆசிரியர் நியமனம்: புதிய பட்டியல் இன்று வெளியீடு
பட்டதாரி ஆசிரியர் நியமன புதிய பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் புதன்கிழமை முதல் படிப்படியாக வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறியது:
முதலில் 6 பாடங்களுக்கான ஆசிரியர்களின் பட்டியலும், அதன்பிறகு 3 பாடங்களுக்கான ஆசிரியர்கள் பட்டியலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ட்ற்ற்ல்://ற்ழ்க்ஷ. ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.
வரும் வெள்ளிக்கிழமைக் குள் முழுமையானப் பட்டியல் வெளியிடப்பட்டு விடும். ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் பதிவுமூப்பு, தகுதிகள் உள்ளிட்ட விவரங்களை மற்றவர்களும் பார்க்கும் வகையில் இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஆசிரியர் பணி நியமன ஆணை அனைவருக்கும் உடனடியாக அனுப்பப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் ஏறத்தாழ 6 ஆயிரம் பேரின் 8 மாத காத்திருப்பு முடிவுக்கு வர உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பணிகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அனைத்தும் நிறைவடைந்து கடந்த பிப்ரவரியில் பணி நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் பணி நியமன ஆணை அனுப்பப்படவில்லை. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மேலும் சிலர் பணி நியமனத்துக்குப் பரிசீலிக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலகம் குழப்பம்: இந்தப் பணி நியமனத்துக்காக வேலைவாய்ப்பு ஆணையர் அலுவலகம் ஏறத்தாழ 5 முறை பட்டியல்கள் அனுப்பியது. பணி நியமன இறுதிப்பட்டியலைத் தயாரிப்பதில் கால தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணம்.
கடந்த 10 நாள்களுக்கு முன்புகூட புதிதாக ஒரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்பியுள்ளது. இறுதியாகப் பட்டியல் அனுப்பாமல் இதுபோன்று அவ்வப்போது பட்டியல் அனுப்புவதால், வேலைவாய்ப்பு அலுவலகம் ஏதேனும் குளறுபடி செய்கிறதோ என்ற கவலையும் பட்டதாரி ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்தக் குழப்பத்தை நீக்கும் வகையில் ஒரேயொரு பட்டியலை வேலைவாய்ப்பு அலுவலகம் அனுப்ப வேண்டும் என்று அனைவரும் கோருகின்றனர்.
thanks: dinamani

Sunday, 4 September 2011
அரசுப் பள்ளிகளில் பணியாற்றுவதற்கான தகுதியும், திறமையும் மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளுக்காக கடந்த 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) உருவாக்கப்பட்டது.
* இந்த ஆசிரியர் தேர்வு வாரியம்தான் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள், பொறியியல் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் ஆகியோரை தேர்வு செய்து வருகிறது.
* தமிழகத்தில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தி ஆசிரியர் பணியிடம் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்ததால் ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டது. பின்னர்தான் 1987ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டது.
*1987க்கு பிறகு முதல்வராக கருணாநிதி பொறுப்பில் இருந்தார். அப்போது தான் முதன் முதலாக வேலை வாய்ப்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் ஆசிரியர்களை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்தார். இது இடைநிலை ஆசிரியர்களுக்கு அதிகம் பயன்பட்டது. பட்டதாரிகள் தேர்வு எழுதி நேர்காணலில் வெற்றி பெற்று பணிநியமனம் பெற்றனர்.
*பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர். * பின்னர் 1991&95 வரை முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தி, தர எண்படி பணி நியமனம் வழங்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களும் அப்படியே தேர்வு செய்யப்பட்டனர். இதனால் பதிவு செய்து காத்திருந்த பட்டதாரிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டனர். வேலை கிடைக்காமல், வயது முதிர்ந்து வேறு வேலையை பார்க்கத் தொடங்கினர்.
*அதற்கு பிறகு 1996&2001 வரை முதல்வராக கருணாநிதி இருந்த காலத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கினார்.
*அதற்கு பிறகு 2001&2006 வரை பொறுப்பில் இருந்த ஜெயலலிதா பணி நியமன தடைச் சட்டம் கொண்டு வந்தார். அப்போதும் பட்டதாரிகள் பாதிக்கப்பட்டனர். பதிலாக ரூ.3000&4000 தொகுப்பு ஊதியத்தின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
*பின்னர் 2006ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் பதிவு மூப்பு அடிபடையில் பட்டதாரிகளுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். அதன்படி 2006&2011 மே மாதம் வரை 55000 ஆசிரியர்கள் பதிவு மூப்பு முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் பெற்றனர். ஆட்சியின் இறுதியில்கூட 6000 பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டு பணி நியமனம் பெறாமல் உள்ளனர்.
*தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2682, பட்டதாரி ஆசிரியர் 5790, இடைநிலை ஆசிரியர் 4342, சிறப்பாசிரியர் 1538, வேளாண் பயிற்றுநர் 25 என மொத்தம் 14377 பேர் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்தார். பின்னர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் விதி 110ன் கீழ் 13300 பட்டதாரி ஆசிரியர்களும், 16549 பகுதி நேர ஆசிரியர்களையும் நியமிக்கப் போவதாக அறிவித்தார்.
*மேற்கண்ட ஆசிரியர் நியமனங்கள் பதவி மூப்பு அடிப்படையிலா அல்லது தேர்வு மற்றும் நேர்காணல் மூலமா என்று முதல்வரோ, பள்ளிக் கல்வி அமைச்சரோ இதுவரை அறிவிக்கவில்லை. ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு நடத்தி தெரிவு செய்வதா, அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்வதா என்பதில் இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். இதற்கிடையே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் �தேர்வு நடத்தியே பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்� என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Subscribe to:
Posts (Atom)